வங்கிக் கணக்கு துவக்க, பராமரிக்க ரிசர்வ் வங்கியின் 6 அதிஅவசிய கட்டளைகள்!

வங்கிக் கணக்கு துவக்க, பராமரிக்க ரிசர்வ் வங்கியின் 6 அதிஅவசிய கட்டளைகள்!


உங்கள் வங்கிக் கணக்கை திறப்பதற்கு மற்றும் பராமரிப்பதற்கு அவசியமான ஆறு விஷயங்களை RBI அண்மையில் தெரிவித்துள்ளது.


1. ஒரு 'அடையாளச் சான்று' , 'முகவரிச் சான்று' மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவை ஒரு வங்கிக் கணக்கு திறக்க போதுமானது.

2. உங்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது NREGA கார்டு - இவை அடையாள மற்றும் முகவரிச் சான்று இரண்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பான் கார்டு, அடையாளச் சான்றுக்கு மட்டும் உதவுகிறது.

3. உங்கள் தற்போதைய முகவரி வங்கிக்குச் சமர்ப்பித்த முகவரிச் சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியிலிருந்து மாறுபட்டிருப்பின், உங்கள் புதிய முகவரி குறித்த ஓர் அறிவிப்பு போதுமானது.

4. உங்கள் வசம் அடையாளம் மற்றும் முகவரிச் சான்றுக்கான ஆவணம் இல்லை என்றாலும், நீங்கள் ஒரு சேமிப்பு வங்கி 'சிறிய கணக்கை' உங்கள் சமீபத்திய புகைப்படம் மற்றும் கையொப்பம் கொண்டு திறக்க முடியும். நீங்கள் ரூ.50,000 வரை கணக்கில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 வரை பணம் எடுக்கலாம் மற்றும் நிதி ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை மொத்தம் கிரெடிட்ஸ் பெறலாம்.


5. வங்கிகள் உங்களுடைய இடர் அபாய விவரம் சார்ந்து ஒவ்வொரு 2, 8 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கேஒய்சி விவரங்களை மறுஉறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவைப்படுகிறது.


6. கேஒய்சி செய்முறை குறித்து, உங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின், தயவுசெய்து உங்கள் வங்கிக்குப் புகார் அளிக்கவும். வங்கியின் பதில் உங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றால் நீங்கள் ஆர்பிஐ-ன் பேங்கிங் ஓம்பட்ஸ்மேன்-க்கு (வங்கி குறைதீர்ப்பாளர்) http://bankingombudsman.rbi.org.in -ல் புகார் அளிக்கலாம் என ஆர்பிஐ சொல்கிறது.