திருமணமும் மார்க்கெட்டிங்கும் ஒண்ணு... எப்படி?

திருமணமும் மார்க்கெட்டிங்கும் ஒண்ணு... எப்படி?


திருமணம் எல்லோருக்கும் தெரியும், ஆனால் மார்க்கெட்டிங் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மார்க்கெட்டிங் மற்றும் அதன் வகைகள் பற்றி தெரிந்துகொள்ள மேலும் படிங்க.

ஒரு விருந்தில் ஒரு அழகான மற்றும் பணக்கார பெண் இருக்கிறாள். ஒரு ஆண் திருமணம் செய்துகொள்ள அணுகுகிறான்.

Direct Marketing

அந்தப் பணக்கார பெண்ணை பார்த்து “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”என்று கூறினால் அது டைரக்ட் மார்க்கெட்டிங்.

Advertising

உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களைக் காண்பித்து “அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது விளம்பரம் (Advertising).

Tele Marketing

நீங்களே அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று அந்த பெண்ணின் தொலைப்பேசி எண்ணை வாங்கிகொண்டு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது

Brand Recognition

ஆனால் அந்தப் பெண்ணே உங்களிடம் வந்து “நீங்களும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்களேன்” என்றால் அது Brand Recognition

இனி மார்க்கெட்டிங் ரியாக்‌ஷனைப் பார்க்கலாம்.

அந்த அழகான, பணக்கார பெண்ணிடம் சென்று நீங்கள் “நானும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறீர்கள்.

Customer Feedback

உடனே அந்தப் பெண் உங்கள் கன்னத்தில் சப்பென்று அறைந்தால்… அதுதான் Customer Feedback


Demand and Supply gap


அதுவே, அந்தப் பெண், 'என் கணவரைக் கேட்டு சொல்லட்டுமா?' என்று தனது கணவரை அறிமுகம் செய்தால் அது Demand and Supply gap.

Competition eating your market share

நீங்கள் அந்தப் பெண்ணிடம் போய் பேசுவதற்கு முன்னால் வேறொருவர், “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறான். அந்த பெண்ணும் அவனுடன் சென்றுவிடுகிறாள். இது தான் Competition eating your market share.

Restriction for entering new markets

நீங்கள் அந்தப் பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறுவதற்கு முன்பே, உங்களின் மனைவி அருகில் துடைப்பத்துடன் வந்தால் அது Restriction for entering new markets.


இப்போது புரிந்திருக்குமே மார்க்கெட்டிங் பற்றி...!